உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டுறவுத்துறை ஊழியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில், 'மண்டல இணைப்பதிவாளர், பதிவாளரின் அறிவுரைகளை பின்பற்றாமல் செயல்படுவதை கண்டித்தும், ஊழியர் விரோத போக்கை கடைபிடிப்பதை' கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விஸ்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிச்சாமி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாநில தலைவர் பழனியம்மாள், மாவட்ட பொருளாளர் கார்த்திக், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாஜூதீன், வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க நிர்வாகி முத்துக்குமார், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ