உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்வாரிய குடியிருப்புகள் பயன்பாடு இன்றி சேதம்

மின்வாரிய குடியிருப்புகள் பயன்பாடு இன்றி சேதம்

போடி: போடி அருகே அணைக்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் பணியாளர் குடியிருப்புகள் கட்டி பல ஆண்டுகள் ஆகியும் பயன்படுத்தாததால் கட்டடங்கள் முட்புதர்களால் சூழ்ந்து சேதமடைந்து வருகிறது.போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. துணை மின் நிலையம் துவங்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு பணிபுரியும் உதவி மின் பொறியாளர் மற்றும் பணியாளர்களுக்காக ரூ. பல லட்சம் செலவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. பணியாளர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளில் சிலர் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். மற்ற குடியிருப்புகளை பயன்படுத்தாமல் உள்ளதால் கட்டடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு உள்ளன. இதனால் கால்நடைகளுக்கு புகழிடமாகவும், முட்புதர்களால் சூழ்ந்து, குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறி உள்ளன.மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீராக தேங்குவதோடு, கட்டடம் சேதம் அடைகிறது. சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் பாதுகாப்பு இன்றி உள்ளது. ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மின் பணியாளர்களுக்கான குடியிருப்புகளை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை