உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பையில் பற்றிய தீயால் தகர செட் சேதம்

குப்பையில் பற்றிய தீயால் தகர செட் சேதம்

தேனி, : தேனி பங்களாமேடு முதல் பென்னிக்குவிக் நகருக்கு செல்லும் ரோட்டில் இடதுபுறத்தில் உள்ள 50 சென்ட் தனியார் இடத்தில் குப்பை கொட்டும் இடத்தில் பற்றிய தீயால் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள எரிந்து சேதமாகியது.தேனி பங்களாமேட்டில் இருந்து பென்னி குவிக் நகருக்கு செல்லும் ரோட்டின் இடது புறத்தில் 50 சென்ட் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அருகில் மருத்துவமனை, எதிரில் குடியிருப்புக்கள் உள்ளன. நேற்று காலை அப்பகுதியில் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் இடத்தில் தீ பற்றியது. குப்பையில் பரவிய தீ, வளர்ந்துள்ள சீமைப்புற்கள் மீது படர்ந்து பற்றி எரிந்தது. இதில் கரும்புகை அதிகளவில் பரவி அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. தேனி உதவி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெயராணி மேற்பார்வையில் மூன்று வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர். தனியார் நிலத்தில் இருந்த தகர செட், மின்மோட்டார் அறை சேதமடைந்தது. 2 லடசம் மதிப்புள்ள சீமைப்புற்கள் சேதமானதாக தேனி போலீசில் உரிமையாளர் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை