உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளால் அபாயம்

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளால் அபாயம்

போடி, : போடி அருகே விசுவாசபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளால் விபத்து அபாயம் நிலை உள்ளது.போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விசுவாசபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அருகே தென்னை, மக்காச்சோளம், சம்பங்கி, கால்நடை தீவனத்திற்கான சீமைப்புல் உள்ளிட்ட பயிர்கள் 10 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ளனர். விளை பொருட்களை வரதராஜ பெருமாள் கோயில் பாதை வழியாக விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். தினமும் பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயில் அருகே கையில் தொடும் வகையில் தாழ்வாக உயரழுத்து மின் கம்பிகள் தொங்கிக் கொண்டுள்ளன. தென்னை கீற்றுகள் மின் கம்பிகள் மீது உரசி விழும் நிலையில் உள்ளது. இதனால் இப்பாதையை கடந்து செல்ல விவசாயிகள், பக்தர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் தாழ்வான நிலையில் தொங்கி கொண்டிருக்கும் உயரழுத்த மின் கம்பிகளை சரி செய்யும் வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை