திண்டுக்கல்: பிளஸ்1, பிளஸ் 2வுக்கு பின் உயர்கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம், எதிர்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மார்ச் 30, 31 ல் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே., மகாலில் நடக்கிறது.பிளஸ் 2 எழுதிய மாணவர்கள் எதிர்கால நலன் கருதி அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்களால், அவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகள் வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டும் மார்ச் 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் கல்விக் கண்காட்சி, கருத்தரங்குகள் திண்டுக்கல்லில் நடக்கின்றன. கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது.கருத்தரங்குகளில் 'அனைவருக்கும் ஐ.ஐ.டி.,'என்ற தலைப்பில் சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, 'கரியர் கவுன்சிலிங்' தொடர்பாக கல்வி ஆலோசகர் அஸ்வின், 'சுகாதார அறிவியல் படிப்பில் வேலை வாய்ப்புகள்' தலைப்பில் பேராசிரியர் வி.பி.ஆர் சிவக்குமார் உட்பட 20க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.ரேபோட்டிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன், ஓபன் ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், கிளவுட் கம்ப்யூட்டிங், ஐஓடி கிளவுட் கம்ப்யூட்டிங், மெட்டாவர்ஸ், டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா, கலை அறிவியல் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமைகள், மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள், கலை அறிவியல் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகளும் வாய்ப்புகளும், சட்டம், சி.ஏ., படிப்பதால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, பிரத்யேக கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை நிபுணர்கள் வழங்குவர். அனுமதி இலவசம்.உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் நேரில் விடைகாண www.kalvimalar.comஎன்ற இணையதளத்தில் உடன் பதிவு செய்யலாம். விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம். கல்லுாரிகளில் விண்ணப்பம் முதல் மாணவர்சேர்க்கை வரையிலான நடைமுறைகள், கல்விக்கட்டணம் உள்ளிட்டவை குறித்தும் ஒரே கூரையின் கீழ் அனைத்து ஆலோசனையும் பெறலாம். இதன் மூலம் கல்லுாரிகளை தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.இந்நிகழ்ச்சியில் பவர்டு பை பங்களிப்பாக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஷ்வ வித்யாலயம் செயல்படுகின்றன. ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்குகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே பெற்றோருடன் வாருங்கள்; பயனடையுங்கள்.
பதில் சொன்னால் பரிசு உண்டு
காலை, மாலை என இரண்டு அமர்வுகளாக நடக்கும் கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட பரிசுகள் காத்திருக்கின்றன.
அனுப்புங்க படிப்புகள்விவரங்களை அறியுங்கள்
பிளஸ் 2 மாணவர்களே தமிழகம் முழுவதும் எந்த கல்லுாரியில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா. உங்கள் அலைபேசியில் இருந்து 91505 74442 என்ற வாட்ஸ்அப் எண்ணிக்கு Hi என அனுப்பினால் அனைத்து விவரங்களும் உங்கள் எண்ணிற்கு இலவசமாக வரும்.