உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டி -வைகை அணை ரோட்டில் வடிகால் சீரமைப்பு

ஆண்டிபட்டி -வைகை அணை ரோட்டில் வடிகால் சீரமைப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக மண் மற்றும் குப்பையால் மூடிக் கிடந்த கழிவுநீர் வடிகால் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்படுகிறது.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா நகரில் ரூ.19 லட்சம் செலவில் புதிய வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த கழிவு நீர் வடிகால், வைகை ரோட்டில் உள்ள பெரிய வடிகாலுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய வடிகால் மண் மற்றும் குப்பையால் மூடிக்கிடந்ததால் கழிவுநீர் வடிந்து செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிநிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் சுத்தம் செய்யப்பட்டது. வடிகாலுக்கான மேல் மூடியை அகற்றி பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டது. தற்போது ரூ.10 லட்சம் செலவில் பெரிய வடிகாலுக்கு புதிய மேல் மூடி அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி