உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் இன்று தேர்தல்; எல்லையில் சோதனை

கேரளாவில் இன்று தேர்தல்; எல்லையில் சோதனை

கூடலுார் : தமிழகத்தில் முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஏப். 19ல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டமாக கேரளாவில் இன்று (ஏப்.26) நடக்கிறது.இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் இரட்டை ஓட்டுப்பதிவை தடுப்பதற்கும், பண பரிமாற்றத்தை கண்காணிக்கவும் எல்லைப் பகுதியான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் தமிழக தேர்தல் பறக்கும்படை நிலை கண்காணிப்பு குழுவினர் எல்லையோரத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் முழுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ