உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சிகளில் தேவைக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வலியுறுத்தல்

ஊராட்சிகளில் தேவைக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வலியுறுத்தல்

கம்பம், : ஊராட்சிகளில் தேவையான எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர், தெருவிளக்குகள், பொதுச் சுகாதாரம் பராமரிப்பில் சிக்கல் நீடித்து வருகிறது. பேரூராட்சிகள், நகராட்சிகளில் பொது நிதி இருப்பு இருப்பதால், துப்புரவு பணிகளில் சுணக்கம் இருப்பதில்லை. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் போதிய நிதி வழங்கப்பட்டுள்ளது. ் நகராட்சிகளில் துப்புரவு பணிகள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.ஆனால் கிராம ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர் எண்ணிக்கை ஒன்றிரண்டு என்ற நிலையில் தான் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகம் செய்த போதும், போதிய துப்புரவு பணியாளர்கள் நியமனம் இல்லை. இதனால் துப்புரவு பணிகளில் பெரிய அளவில் தேக்கநிலை காணப்படுகிறது.இதை சரி செய்ய ஒவ்வொரு ஊராட்சியிலும் அதன் பரப்பு, மக்கள் தொகை, சேகரமாகும் குப்பை அளவு, தற்போதுள்ள பணியாளர் எண்ணிக்கை அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறையினர் கூறுகையில், ஊராட்சிகளில் தேவைப்படும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.விரைவில் தேவையான எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.தனியார் மயமாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை