உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கருணை அடிப்படை குரூப் சி பணி நியமனம் செய்ய ஒட்டு மொத்த பணியிடங்களில் 5 சதவீதம் மட்டும் வழங்க மாநில அரச உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இந்த உச்ச வரம்மை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.சங்கத்தின் மாவட்டத் தலைவர் உடையாளி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சென்னமராஜ், பொருளாளர் முகமது ஆசிக், மாவட்ட இணைச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை