உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுகாதார வளாகத்தில் தொங்கும் மின் ஒயர்

சுகாதார வளாகத்தில் தொங்கும் மின் ஒயர்

பெரியகுளம், : பெரியகுளம் டி.எஸ்.பி., அலுவலகம் வடகரை நகராட்சி வளாகத்தின் கீழ் தளத்தில் செயல்படுகிறது. மேல் தளத்தில் எஸ்.பி.ஐ., வங்கி கிளை உள்ளது. இவ்விரு அலுவலகங்களுக்கு வருபவர்களுக்கு ஆண், பெண் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதனை முன்பு போலீசார்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சில மாதங்களாக பராமரிப்பின்றி சுகாதார வளாகத்தில் ஒட்டடை அடைந்து, கோப்பைகள் சேதம் அடைந்து பயன்பாடின்றி உள்ளது. இதனால் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சேதமடைந்த சுகாதார வளாகத்தில் மின் ஒயர் அறுந்து தொங்குகிறது. ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்குள் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் சுகாதார வளாகத்தை தூய்மைப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை