உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி திருவிழாவிற்கு சென்று திரும்பிய கணவன், மனைவி பலி

வீரபாண்டி திருவிழாவிற்கு சென்று திரும்பிய கணவன், மனைவி பலி

கம்பம்:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு தமது ஆட்டோவில் திரும்பிய போது, அரசு பஸ் மோதியதில் கணவன் மனைவி பலியாகினர்.கம்பத்தை சேர்ந்தவர் நல்லதம்பி 37. மனைவி ரம்யா 30. தங்களது ஆட்டோவில் மே 7 இரவு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றனர். இரவு முழுவதும் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று அதிகாலை கம்பம் திரும்பினர். நல்லதம்பி ஆட்டோவை ஓட்டினார். கம்பம் புதுப்பட்டி தனியார் பள்ளி அருகே வந்த போது, கம்பத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ், ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே நல்லதம்பி பலியானார். படுகாயமடைந்த ரம்யா தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை