உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்பாடு அதிகரிப்பு; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்பாடு அதிகரிப்பு; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

தேனி : மாவட்டத்தில் பஸ்கள், டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் டூவீலர்கள், பஸ்கள், கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதியவர்கள், பெண்கள் டூவீலர்களில் செல்லும் போது இவ்வகை ஹாரன்களில் இருந்து ஒலி எழுப்பும் போது பலர் தடுமாறும் நிலை தொடர்கிறது. சிலர், மற்ற வாகனங்களில் மோதி வாகனங்களை நிறுத்துகின்றனர். இவ்வகை ஹாரன் பொருத்தப்பட்டு உள்ள வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துக்களும் தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதே கிடையாது. ஆண்டிற்கு ஒன்று, இரண்டு முறை மட்டும் சம்பரதாயத்திற்காக அதிக ஒலி எழுப்பிய வாகனங்களில் இருந்து ஹாரன்கள் அகற்றப்படும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. ஆனால் வாகனங்களில் மீண்டும் அதே சத்தம் எழுப்ப கூடிய ஹரான்கள் பொருத்தப்படுகின்றன. அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை தொடர்ந்து கண்காணித்து, விபத்து ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ