உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுதந்திர தினவிழா முன்னேற்பாடு

சுதந்திர தினவிழா முன்னேற்பாடு

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்து உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் பட்டியலை துறை வாரியாக விரைந்து வழங்க வேண்டும்.தியாகிகள் வாரிசுகள், பயனாளிகள் அமரும் இடங்களை முறையாக அமைக்க வேண்டும். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை சி.இ.ஓ., ஒருங்கிணைக்க வேண்டும்.பஸ் ஸ்டாண்டில் இருந்து மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.பொதுமக்களுக்கு போதிய அளவில் குடிநீர், சுகாதார, பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை