உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாய், பூனைக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

நாய், பூனைக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

மூணாறு : மூணாறு அருகே நாய் கடித்த பெண் பலியான சம்பவத்தையடுத்து அப்பகுதியில் நாய், பூனை ஆகியவற்றிற்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.மூணாறு அருகே குண்டளை சான்டோஸ் மலைவாழ் மக்கள் வசிக்கும் நகரைச் சேர்ந்த மாலாமணி 51, வளர்ப்பு நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்தார்.அப்பகுதி தேவிகுளம் ஊராட்சியில் இரண்டாம் வார்டுக்கு உட்பட்டது. அந்த வார்டில் வளர்ப்பு மற்றும் தெரு நாய்கள், பூனைகள் ஆகியவற்றிற்கு கால்நடை பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஊராட்சியினர் உதவியுடன் தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கினர்.28 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த வார்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடரும் எனவும் தேவிகுளம் ஊராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை