உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன்பாடில்லாத மேல்நிலைத் தொட்டி அகற்ற வலியுறுத்தல்

பயன்பாடில்லாத மேல்நிலைத் தொட்டி அகற்ற வலியுறுத்தல்

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி 13 வது வார்டு செயின்ட் சேவியர் தெருவில் மூவாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி மூலம் வினியோகம் செய்யப்பட்டது. இத் தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதானது. நான்கு தாங்குதானமும் சேதமானது. நகராட்சி நிர்வாகம் சேதமான மேல்நிலைத்தொட்டியை அகற்றி விட்டு புதிய மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நகராட்சி கூட்டத்தில் பழுதடைந்த மேல்நிலைத் தொட்டி அகற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போதுவரை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்பவர்கள் அச்சத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் விரைவில் பழுதடைந்த மேல்நிலைத் தொட்டியை அகற்ற வேண்டும்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை