உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சர்வதேச புலிகள் தின விழா

சர்வதேச புலிகள் தின விழா

கம்பம் : ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ல் கடைப்பிடிக்கப்படுகிறது. கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நேற்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் காந்த வாசன் தலைமை வகித்தார். முதல்வர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன் வரவேற்றனர். பள்ளி இணை செயலர் சுகன்யா பேசுகையில், 'இந்தியாவில் 2023 கணக்கெடுப்பு படி 3682 புலிகள் உள்ளது. மத்திய மாநில அரசுகள் புலிகள் எண்ணிக்கை குறையாமல் இருக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. மேகமலை 51வது காப்பகமாகும். புலிகள் மட்டுமின்றி வன உயிரினங்கள் இருந்தால் தான் காடுகள் இருக்கும். காடுகள் இருந்தால் தான் மழை கிடைக்கும். எனவே ஒவ்வொரு மாணவரும் காடுகள், வன உயிரின பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி ஏற்க வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை