உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவாரத்தில் நாய் கடியால் 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தேவாரத்தில் நாய் கடியால் 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தேவாரம்: தேவாரம் பேரூராட்சி பகுதியில் நாய் கடியால் 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேவாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மைதானம், மெயின் பஜார் பகுதிகளில் தெரு நாய்கள் பராமரிப்பு இன்றி நோய் பாதித்து வெறி பிடித்த நிலையில் சுற்றி திரிகின்றன. தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாய்களின் தொந்தரவால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல அஞ்சி ஆட்டோவில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் 2 நாட்களில் செல்வகுமார் 38, அய்யா கண்ணு, சிவகாமி, கார்த்தி, உதயன், மாதங்கி உட்பட 10 க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிப்பு அடைந்து தேவாரம் ஆரம்ப சுகாதார நிலையம், உத்தமபாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை ஆப்பரேஷன் மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக தேவாரம் சிவசேனா பேரூர் பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை