உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர்கள் விபத்தில் ஒருவர் பலி

டூவீலர்கள் விபத்தில் ஒருவர் பலி

மூணாறு : மூணாறு அருகே மாட்டுபட்டியில் டூவீலர்கள் நேருக்கு, நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் இறந்தார்.மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட் டாப் டிவிஷனைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 45. இவர் நேற்று மாலை தனது டூவீலரில் சகோதரியின் மகள் மஞ்சுவுடன் 17, சென்றார். மாட்டுபட்டியில் தனியார் ஆங்கில பள்ளி பகுதியில் சென்ற போது எதிரே வந்த சுற்றுலாப் பயணிகளின் டூவீலர் பலமாக மோதியது. அதில் பாஸ்கரன், மஞ்சு, லட்சத்தீவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் யாசர் 28, அவரது மனைவி சுமையா 26, ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மூணாறு டாடா மருத்துவமனையில் நால்வரும் அனுமதிக்கப்பட்டனர். அதில் பாஸ்கரன் இறந்தார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி