உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

தேனி: தேனி சோலைமலை அய்யனார் கோயில் தெரு பெருமாள் 38, டைல்ஸ் கடையில் வேலை செய்தார். இவரது நண்பர் பாராஸ்ட் ரோடு வீரசங்கர் 30. இருவரும் தேனி மதுரை ரோடு பங்களா மேட்டில் டூவீலரில் சென்றனர்.டூவீலரை ஒட்டிய பெருமாள் வாகனத்தை திரும்பியபோது தடுமாறி விழுந்தார். இருவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர். பெருமாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பெருமாளின் தந்தை வேலுச்சாமி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி