உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

தேனி பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்டில் நடைபாதையை ஆக்கிரமிப்பதில் கடைக்காரர்கள் இடையே போட்டி எழுந்துள்ளது. இதனால் பயணிகள் நடந்து செல்ல வழியின்றி சிரமம் அடைகின்றனர்.தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் தமிழகத்தையும், கேரள மாநிலத்தையும் இணைக்கும் முக்கிய பஸ் ஸ்டாண்டாக உள்ளது. இங்கு 3 நடைமேடைகள் உள்ளன. முதல் நடைமேடையில் மதுரை, போடி, சென்னை, பெங்களுரூ பஸ்களும். 2வது நடைமேடையில் திண்டுக்கல், கம்பம், திருநெல்வேலி, பஸ்கள், 3வது நடைமேடையில் கோவை, திருப்பூர், டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றனர். இங்கு டீக்கடைகள், பலகார கடைகள், ஓட்டல்கள் செயல்படுகின்றனர். கடைக்காரர்கள் பஸ் ஸ்டாண்ட் நடைமேடையை ஆக்கிரமிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகள் நடக்க வழி இன்றி சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். பயணிகள் உட்காரவும், நிழலுக்கு ஒதுங்கவும் முடியால் சிரமம் அடைகின்றனர். கடைகளுக்கு முன் பயணிகள் நின்றால் சில கடைக்காரர்கள் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கிறது. நடைமேடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை