உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ்சிற்காக  தேனியில் 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள்

பஸ்சிற்காக  தேனியில் 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள்

தேனி : தேனி மதுரை ரோட்டில் மேம்பால பணிக்காக தற்காலிக ரோடு அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரோடு கோடைமழையில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இந்த ரோட்டினை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் நேருசிலையில் இருந்து மதுரைரோடு வரையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வாகனங்கள் அன்னஞ்சி விலக்கு வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கம்பம், போடி, குமுளி, வீரபாண்டி, குச்சனுார் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்வது வழக்கம். போக்குவரத்து நெரிசல் காரணமாக 2 மணிநேரத்திற்கு மேலாக பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வர வில்லை. இதனால் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பொது போக்குவரத்து தடையின்றி செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை