உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராஜதானியில் துணை மின் நிலையம் அமைக்க பொது மக்கள் வலியுறுத்தல்

ராஜதானியில் துணை மின் நிலையம் அமைக்க பொது மக்கள் வலியுறுத்தல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜதானியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் துணை மின் நிலையம் அமைக்க பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.இப்பகுதிக்கு கண்டமனுார், ஆண்டிபட்டி துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் ஆகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பிகளில் திறன் குறைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி குறைந்த மின் அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. மும்முனை மின்சாரம் இருந்தாலும் குறைந்த மின் அழுத்தத்தால் விவசாய மின் மோட்டார்கள் பாதிப்படைகின்றன. இரவில் மின் விளக்குகள் சரியாக எரிவது இல்லை. இதனால் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த பல ஆண்டுகளில் இப்பகுதியில் மின் இணைப்புகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. குறைந்த மின் அழுத்த பாதிப்பை சரி செய்ய இப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ராஜதானியை மையமாக வைத்து இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை