உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை

ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை

கம்பம் : கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500 க்கு 497 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளி பிளஸ் 2, 10ம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி, அதிக மதிப்பெண்கள் பெறுவது என்ற சாதனையை தொடர்ந்து செய்து வருகிறது.10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவி வித்யாரக் ஷனா 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தார். தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று நூறு சதவீத தேர்ச்சியை பெற்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்விலும் நூறு சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பதிவு செய்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பல பாடப் பிரிவுகளில் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.சாதனை மாணவர்களை பள்ளியின் நிர்வாக குழு தலைவர் சவுந்தரராசன், தாளாளர் கவிதா, முதல்வர் கயல்விழி உள்ளிட்டோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை