உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வக பயிற்றுனர் பணிக்கு  தேர்வு

பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வக பயிற்றுனர் பணிக்கு  தேர்வு

தேனி: மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் அமைய உள்ள கம்ப்யூட்டர் ஆய்வக பயிற்றுனர் பணிக்காக 391 பேர் தேர்வு எழுதினர்.தமிழகத்தில் 8ஆயிரம் அரசு நடுநிலைப்ள்ளிகளில் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கபடுகிறது. மாவட்டத்தில் உள்ள 99 அரசு நடுநிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.ஒவ்வொரு பள்ளியிலும் 20 கம்ப்யூட்டருடன் ஆய்வகம் அமைகின்றன. இங்கு பணிபுரிய ஆய்வக பயிற்றுனர்களுக்கான 2ம் கட்ட தேர்வு கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தேர்வில் 391 பேர் பங்கேற்றனர். தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடந்தது. இதனை கல்வித்துறை அதிகாரிகள் மேற்பாவையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி