உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீசார் அனுமதி மறுக்கும் இடத்திற்கு ஆர்.டி.ஓ. அனுமதி: ஒருங்கிணைப்பு இல்லாத தேர்தல் பணி

போலீசார் அனுமதி மறுக்கும் இடத்திற்கு ஆர்.டி.ஓ. அனுமதி: ஒருங்கிணைப்பு இல்லாத தேர்தல் பணி

உத்தமபாளையம் : அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பொதுக்கூட்டம், தெருமுனை பிரசாரத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கும் இடத்திற்கு, உதவி தேர்தல் நடந்தும் அலுவலர் ஆர்.டி.ஓ. அனுமதி வழங்கியுள்ளார். லோக்சபா தேர்தல் ஏப்.19ல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் பொதுக் கூட்டம், தெருமுனை பிரசார இடங்களை தேர்வு செய்து போலீசார் வருவாய்த்துறைக்கு வழங்கி உள்ளனர். குறிப்பாக அனுமதி மறுக்கப்படும் இடங்களை குறிப்பிட்டும் அதற்கான காரணங்களை விளக்கியும் உள்ளனர்.உதாரணமாக உத்தமபாளையத்தில் பைபாஸ் சந்திப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகே தெருமுனை பிரசாரம் நடத்த அனுமதிக்கலாம் என்று போலீசார் கூறி உள்ளனர். ஆனால் கடந்த ஏப். 7 மாலை அ.தி.மு.க. வேட்பாளர் உத்தமபாளையம் தேரடியில் திறந்த ஜீப்பில் நின்று பிரசாரம் செய்தார். கடந்த 6 மாதமாக தேரடியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தை காட்டி போலீசார் எந்தவித நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுத்து வருகின்றனர்.இந்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் அங்கு எப்படி பிரசாரம் செய்தார் என்று போலீசாரிடம் கேட்டதற்கு, கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ விடம் மொத்தமாக அனுமதி பெற்றுள்ளனர். தேரடியில் அனுமதிக்க கூடாது என்று ஆர்.டி.ஓ. விற்கு போலீஸ் சார்பில் அறிக்கை தரப்பட்டுள்ளது. எப்படி அனுமதித்தனர் என்பது தெரியவில்லை என்கின்றனர்.போலீஸ், வருவாய்த் துறை இடையே ஒருங்கிணைப்பு இல்லையென்றால் தேர்தல் அமைதியாக நடத்துவதில் சிரமம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை