உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குண்டளை அணை வற்றியதால் வெளியில் தெரியும் சிதிலமடைந்த கட்டடங்கள்

குண்டளை அணை வற்றியதால் வெளியில் தெரியும் சிதிலமடைந்த கட்டடங்கள்

மூணாறு: மூணாறு அருகே குண்டளை அணையில் தண்ணீர் வற்றியதால் சிதிலமடைந்த கட்டடங்கள் வெளியில் தெரிகின்றன.மூணாறு, டாப் ஸ்டேஷன் ரோட்டில் 20 கி.மீ., தொலைவில் குண்டளை அணை உள்ளது. அதனை கேரள மின்வாரியத்தினர் பராமரிக்கின்றனர். 62 அடி உயரம் கொண்ட அணையில் மின்வாரியத்தின் ஹைடல் சுற்றுலா சார்பில் பெடல் படகு, சிக்காரியா உள்பட பல்வேறு வகை சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து மே 4ல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டன. தற்போது தண்ணீர் முழுவதும் வெளியேறி விட்டதால், தண்ணீரில் மூழ்கி சிதிலமடைந்த கட்டடங்கள் வெளியில் தெரிகின்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து அதிசயித்தனர்.ஏமாற்றம்: அதேசமயம் குண்டளை அணையில் மட்டும் தான் தேனிலவு தம்பதியினருக்கு என சிக்காரியா வகை படகுகள் இயக்கப்படுகின்றன. அவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இழப்பு: கோடை சுற்றுலா சீசனில் மே மாதம் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். குண்டளை அணையில் சுற்றுலா சீசனில் படகு சேவை நிறுத்தப்பட்டதால் மின்வாரியத்திற்கு ரூ. பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது.நிரம்பும்: குண்டளை அணை கேரள, தமிழக எல்லையான டாப் ஸ்டேஷனை ஒட்டி உள்ளதால் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் போது அணை நிரம்பும் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ