| ADDED : ஜூன் 25, 2024 12:15 AM
கம்பம்: மாவட்டத்தில் கருத்தரித்தலை தடுக்க கருத்தடை மாத்திரை அடங்கிய 'செல்ப் கேர் கிட்'களை, 200 இடங்களில் வைக்க குடும்ப நலத்துறை திட்டமிட்டுள்ளது.மக்கள் தொகைகட்டுப்படுத்தஆண்களுக்கு'வாசக்டமி' அறுவை சிகிச்சை கடந்தாண்டு கணிசமாக மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து கருத்தடை ஆப்பரேஷன்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.38 லட்சத்தில் நிறுவப்பட்ட நவீன கருவி மூலம் 72 ஆண்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து குடும்ப நலத்துறை துணை இயக்குநர் அன்புச்செழியன் கூறியதாவது: அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆப்பரேஷன்கள் செய்து வருகிறோம். ஜூலை 27ல் கலெக்டர் தலைமையில் அனைத்து துறையினரை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம்.தொடர்ந்து 2 மாதங்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறும்.இதில்திருமணத்தை உரிய வயதில் நடத்துவது, ஒரு குழந்தைக்கும், மற்றொரு கருத்தரிப்பிற்கும் தேவையான இடைவெளி விடுவதுவிளக்கி கூறப்படும் 41 இடங்களில் அவசர கால கருத்தடை மாத்திரை, காண்டம், கருத்தரித்துள்ளதா என்பதை கண்டறியும் அட்டை அடங்கிய 'செல்ப் கேர் கிட்'கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 200 இடங்களில் வைக்க உள்ளோம்.இதில் உள்ள மாத்திரையை 72 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொண்டால், கருத்தரிப்பு தடுக்கப்படும்என்றார்.