| ADDED : ஜூன் 22, 2024 01:50 AM
பெரியகுளம்:ஆயிரம் பவுன் நகைகள் கொள்ளையடித்து, ரூ.4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய முகமூடி கொள்ளையர்கள் வழக்கில் தேடப்பட்டு வரும் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தி 35, அம்சராஜன் 35, சோத்துப்பாறை அணை மாந்தோப்பு பகுதியில் பதுங்கியுள்ளனரா என போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை, விருதுநகர், கோவை உட்பட பல மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் முகமூடி அணிந்து ஆயிரம் பவுன் நகை கொள்ளையடித்த சம்பவத்தில் பெரியகுளம் தென்கரை, தெற்கு தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் வழக்கறிஞருக்கு படித்துள்ள அருண்குமார் 23, தென்கரை தெற்கு புது தெருவை சேர்ந்த ராஜா மகன் ஆடிட்டருக்கு படித்துள்ள சுரேஷ்குமார் 26, உட்பட 5 பேரை ராஜபாளையம் தெற்கு போலீசார் கைது செய்தனர்.பிடிபட்ட கொள்ளையர்களின் நண்பர்களான பெரியகுளம் தெற்கு புது தெரு கணேசன் மகன் மூர்த்தி 35, வாகம்புளி அம்சராஜன் இருவரும் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை மாந்தோப்பு பகுதியில் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. கோவை, மதுரை, விருதுநகர் குற்றப்பிரிவு தனிப்படையினர் மாந்தோப்புகளில் மோப்ப நாயுடன்தேடிவருகின்றனர்.இக்கொள்ளையர்கள் பெரியகுளம் பாரதிநகரில் ஜூன் 17 ல் சஸ்பெண்ட் தாசில்தார் வீட்டில் 50 பவுன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரிக்கின்றர்.