உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெளிமாவட்டங்களில் இருந்துவரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

வெளிமாவட்டங்களில் இருந்துவரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

ஆண்டிபட்டி : வெளி மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தேனி லோக்சபா தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனுக்கு ஆதரவாக, வெளியூர்களில் இருந்து தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி பகுதியிலும் ஏராளமானவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தேனியில் பிரசாரம் செய்தார். இன்று தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். மாவட்டத்திற்கு இரு வி.வி.ஐ.பி.,க்கள் வருகையை தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் பலர் தேனி மாவட்டத்திற்கு பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனைத் தொடர்ந்துவெளி மாவட்டங்களில் இருந்து நுழைவுப் பகுதியான ஆண்டிபட்டியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் பறக்கும் படை மற்றும் நிலை குழுவினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை