உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாரியில் சென்ற கிரஷர் இயந்திரம் ஆண்டிபட்டியை கடப்பதில் சிரமம்

லாரியில் சென்ற கிரஷர் இயந்திரம் ஆண்டிபட்டியை கடப்பதில் சிரமம்

ஆண்டிபட்டி : லாரியில் கொண்டு செல்லப்பட்ட கல்குவாரிக்கான ராட்சத கிரஷர் இயந்திரம் ஆண்டிபட்டி நகர் பகுதியை கடந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.பழநியில் இருந்து ராட்சத கிரஷர் இயந்திரத்தை ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் கல்குவாரிக்கு கொண்டு சென்றனர். நேற்று காலை ஆண்டிபட்டி வைகை ரோட்டிற்கு கிரஷ்ஷருடன் வந்த லாரியை தொழிலாளர்கள் ரோட்டின் இருபுறமும் நின்ற வாகனங்கள், கட்டடங்களில் உரச விடாமல் பத்திரமாக நகர்த்தி கொண்டு சென்றனர். ரோட்டில் குறுக்காக சென்ற மின் கம்பிகள், ஒயர்களை அதற்கான கம்புகள் மூலம் உயர்த்திப் பிடித்து கிரஷர் இயந்திரத்தில் உரசாதபடி பாதுகாத்தனர்.நேற்று காலை சனிக்கிழமை ஆண்டிபட்டி பகுதியில் கடைகளுக்கு விடுமுறை என்பதால் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. இதனை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக கிரஷர் இயந்திரத்துடன் லாரியை நகர்த்தி நகர் பகுதியில் இருந்து கடந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ