உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 20 ஆயிரம் வேப்பங்கன்றுகள் வழங்க வேளாண் துறை ஏற்பாடு

20 ஆயிரம் வேப்பங்கன்றுகள் வழங்க வேளாண் துறை ஏற்பாடு

தேனி : விவசாயிகள் வேப்ப மரங்கள் அதிகம் வளர்ப்பதை ஊக்குவிக்க வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வேப்பங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. வயல்களில் நடவு செய்வதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 200 மரகன்றுகள் வீதம் வழங்கவும், வரப்புகளில் மட்டும் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 60 வீதம் வழங்கப்பட உள்ளது.ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 5 ஏக்கர் வரை வழங்கப்பட உள்ளது.மாவட்டத்தில் 20ஆயிரம் வேப்பங்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி