உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மொபைல் போன் பறிப்பு

லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மொபைல் போன் பறிப்பு

ஆண்டிபட்டி: தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் 37, லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து லாரியில் உப்பு மூடைகள் ஏற்றிக்கொண்டு தேனிக்கு சென்றுள்ளார்.இரவு 10:00 மணிக்கு க.விலக்கு அடுத்துள்ள அரப்படித்தேவன்பட்டியில் லாரியை நிறுத்திவிட்டு இரவு உணவுக்கு பின், லாரியின் சக்கரங்களில் காற்று உள்ளதா என்று சோதனை செய்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி நாகராஜிடம் இருந்த மொபைல் போனை பறித்து சென்றார். இது குறித்து அப்பகுதியில் விசாரித்த போது மொபைல் போன் பறித்துச் சென்றவர் அப்பகுதியைச் சேர்ந்த டேவிட் சந்திரசேகர் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து நாகராஜ் க.விலக்கு போலீசில் புகார் செய்தார். ஏற்கனவே டேவிட் சந்திரசேகர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை