உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி புது பஸ்ஸ்டாண்ட் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்; நகர் பகுதியிலும் நடவடிக்கை தேவை

தேனி புது பஸ்ஸ்டாண்ட் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்; நகர் பகுதியிலும் நடவடிக்கை தேவை

தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள், போலீசார் இணைந்து அகற்றினர்.தேனி - மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்துவருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் அரசு ஐ.டி.ஐ., புது பஸ் ஸ்டாண்ட் வழியாக வந்து செல்கின்றன.இதனால் புது பஸ் ஸ்டாண்ட் முதல் அரசு ஐ.டி.ஐ., வரை இருவழிச்சாலையாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் ஆபீஸ் ரோடு பெட்ரோல் பல்க் வரை இருபுறமும் உள்ள கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து சிமென்ட் தளங்கள் அமைத்து வாகனங்கள் நிறுத்துவதாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.இந் நிலையில் கலெக்டர் ஷஜீவனா உத்தரவில், நகராட்சி நகரமைப்பு அலுவலர் நாசர் தலைமையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. கடைகள் முன் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் தளங்கள், விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 'நோ பார்க்கிங்' கில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களுக்கு சங்கிலியால் பூட்டி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கண்துடைப்பாக நடக்காமல், நகரின் மற்ற பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டும்.போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பெரியகுளம் ரோட்டில் அல்லிநகரம், மேற்கு சந்தை, நகராட்சி அலுவலக பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !