உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம் திரளான பக்தர்கள் தரிசனம்

தேனி வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம் திரளான பக்தர்கள் தரிசனம்

தேனி, - தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழா மார்ச் 28 கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு பூக்குழி திருவிழா நடந்தது. ஏப்.,10 காவடிகளுக்கு கலசம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு சுவாமி மின் அலங்காரத்தில் பங்களா மேட்டில் உள்ள சோலை மலை அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றார். பக்தர்கள் காவடியுடன் சென்றனர். சித்திரை முதல்நாளான நேற்று காலை சுவாமி காவடியுடன் புஷ்ப அலங்காரத்தில் மலைக்கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். சுவாமியை தரிசிக்க தேனி, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் இருபுறம் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மறு பூஜைவிழா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி தலைமையில், துணைத்தலைவர் சிவராமன், செயலாளர் தாமோதரன், உதவி செயலாளர் வீரமணி, பொருளாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.போக்குவரத்து நெரிசல் திருவிழாவில் பொதுமக்கள் வாகனங்களில் கோவில் வளாகம் வரை கொண்டு வந்தனர். திண்டுக்கல் - குமுளி பை பாஸ் ரோட்டில் இருந்து கோயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை