உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுலா பயணியை தாக்கிய மூவர் கைது

சுற்றுலா பயணியை தாக்கிய மூவர் கைது

மூணாறு: மாங்குளம் ஊராட்சியில் ஆனக் குளத்தில் சுற்றுலா பயணியை தாக்கிய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் உள்ள ஆனக்குளம் முக்கிய சுற்றுலா பகுதியாகும். எர்ணாகுளம் அருகே பரவூர் சொராயி பகுதியைச் சேர்ந்த நிதீஷ் 32, தனது உறவினர்களுடன் ஆனக்குளத்திற்கு ஏப்.14ல் காரில் சுற்றுலா சென்றார். அங்கு நடந்து சென்ற ஒருவர் மீது கார் சிறிது உரசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் நிதீஷை பலமாக தாக்கினர். அவர் மூணாறு போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கில் தலைமறைவான ஆனக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் 26, சனீஷ் 23, பிஜூ 44, ஆகியோரை இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்