உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 24ல் பயிற்சி ஆரம்பம்

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 24ல் பயிற்சி ஆரம்பம்

தேனி,: லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. மாவட்டத்தில் 562 அமைவிடங்களில் 1225 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தல் பணியில் 13ஆயிரத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இதில் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு மார்ச் 24ல் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. ஆண்டிப்பட்டியில் வேளாங்கன்னி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி இசட்.கே.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் மேரிமாதா மேல்நிலைப்பள்ளி, கம்பம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லுாரி, தேனி வீரபாண்டி சவுராஸ்டிரா கல்லுாரி ஆகிய இடங்களில் நடக்கிறது. பயிற்சியில் மாதிரி ஓட்டுபதிவு மையம், வாக்காளர் உதவி மையம் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி