உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுச்சூழல் மாசு குறைக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

சுற்றுச்சூழல் மாசு குறைக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

கம்பம் காமயக்கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாகமும், கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி வளாகமும் பசுமை படர்ந்த வளாகமாக மாறியுள்ளது. இங்கு மரக்கன்றுகள் வளர்ப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கம்பம் நகரம். இருமாநில எல்லையாகவும் உள்ளது. ஆண்டு முழுவதும் சீதோஷ்ண நிலை ரம்மியமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புவி வெப்பமயமாதல் காரணமாக இங்கேயும் அதிக வெப்பம், அதிக மழை காணப்படுகிறது. இந்தாண்டு பனி காலத்தில் பனிப்பொழிவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சர்வதேச அளவில் உள்ள நிலையே இங்கும் உள்ளது. அதை மாற்ற தொண்டு நிறுவனங்கள் மரம் வளர்ப்பில் களம் இறங்கியுள்ளன. தனியார் பள்ளி நிர்வாகங்களும் பசுமையை வலியுறுத்த துவங்கி உள்ளன. இதனால் மாசுபடும் நிலை குறைய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.இருந்த போதும் அதிகார மட்டத்தில் இருப்பவர்களும் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாள்பட்ட வாகனங்கள் இயக்குவதை வட்டார போக்குவரத்து துறை தடுக்க வேண்டும். குறிப்பாக நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும். நகராட்சிப் பள்ளிகளில் மரங்கன்கள், செடிகள் வளர்க்கலாம். பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் நடுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதன் முன்னோடியாக காமயக் கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார வளாகம் பசுமை வளாகமாக மாற்றப்பட்டு உள்ளது.

மாசில்லா சூழல்

சிராசுதீன், சித்தா டாக்டர் : நான் பணியாற்றும் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார வளாகம் பசுமை வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. மூலிகைத் தோட்டம் ஒன்றை அமைத்துள்ளேன். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கிறது. இங்குள்ள அத்தி மரத்தில் கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் அத்தி பழங்களை சிகிச்சை பெற வரும் பொது மக்கள் பறித்துச் செல்கின்றனர். அத்தி பழம் மருத்துவ குணம் கொண்டதாகும். மூலிகை தோட்டத்தில் உள்ள ஆடாதொடை, துாதுவளை, பச்சிலை, பிரண்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பறித்து செல்கின்றனர். ஒவ்வொருவரின் வீட்டிலும் மூலிகைச் செடிகள் வளர்க்க வலியுறுத்தி அதற்கான உதவிகளையும் செய்து வருகின்றோம். சுற்றுப்புறச் சூழல் மாசில்லாமல் இருந்தால், நோய்கள் தாக்காது. எனவே மூலிகைச் செடிகள் வளர்ப்பு, அதன் பயன்கள் குறித்து சிகிச்சைக்கு வருபவர்களிடம் விளக்கிக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி