உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குமுளி பஸ் ஸ்டாப்பில் பலத்த காற்றால் சாய்ந்த மரக்கிளைகள்

குமுளி பஸ் ஸ்டாப்பில் பலத்த காற்றால் சாய்ந்த மரக்கிளைகள்

கூடலுார்: தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. கேரள பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது.ஆனால் தமிழக பகுதியில் பஸ் நிறுத்துவதற்கு கூட இடமின்றி ரோட்டிலேயே நிறுத்தப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளும் இல்லை. இந்நிலையில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து துறையினரால் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி துவங்கி பல மாதங்கள் ஆகியும் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன.பஸ் ஸ்டாப்பில் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் மரங்கள் இருந்தது. இதை அகற்ற மக்கள் பலமுறை வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் தற்போது பலத்த காற்றால் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பயணிகள் யாரும் நிற்காததால் பாதிப்பு ஏற்படவில்லை.குமுளியில் இருந்து லோயர்கேம்ப் வரை உள்ள மலைப்பாதையிலும் பல இடங்களில் சாயும் நிலையில் மரங்கள் ரோட்டின் ஓரங்களில் உள்ளன. மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் இதுபோன்ற மரங்களை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி