உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தபால் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

தபால் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

கூடலுார்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட தபால்துறை சார்பில் கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.தலைமையாசிரியர் வெங்கட்குமார் தலைமையில், தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் பள்ளி வளாகத்தில் நாவல், வாகை, பூவரசு, புங்கை உள்ளிட்ட பலவகையான மரக்கன்றுகளை நட்டார். மரங்கள் வளர்ப்பதன் அவசியம் அதன் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தபால் துறை போடி உப கோட்ட ஆய்வாளர் சதீஷ், நேரடி உதவியாளர் பரமசிவம், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சென்றாயபெருமாள், ஆசிரியர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை