உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழை பெய்தும் உயராத வைகை நீர்மட்டம்

மழை பெய்தும் உயராத வைகை நீர்மட்டம்

ஆண்டிபட்டி:நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து மழை பெய்தும் வைகை அணை நீர்மட்டம் உயரவில்லை.வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். மே 10ல் வைகை அணை நீர்மட்டம் 56.66 அடியாக இருந்த நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்காக அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் மே 27 ல் 47.80 அடியாக குறைந்தது. கடந்த சில வாரங்களாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் அடுத்தடுத்து மழை பெய்து வருகிறது. ஆனால் அணைக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை. இதனால் அணை நீர்மட்டம் உயரவில்லை. நேற்று காலை நீர்மட்டம் 47.70 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 185 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை