உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

பெரியகுளம்: சென்னை விருகம்பாக்கம் எம். ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார் 42. வாகனம் டிரைவராக வேலை செய்து வந்தார். தங்களது ஊரான வடுகபட்டியில் திருவிழாவை பார்ப்பதற்கு மனைவி கவிதா 27. உடன் சில தினங்களுக்கு முன் வடுகபட்டி ராஜேந்திரா நகருக்கு வந்தார்.நேற்று வீட்டிலிருந்து டூவீலரில் முளைப்பாரி பார்ப்பதற்கு வரும் போது இடது புறமாக டூவீலரை திருப்பினார். அந்த வழியாக வந்த லோடு வேன் பழனிக்குமார் மீது மோதி, டூவீலருடன் இழுத்துச் சென்றது. இதில் பழனிக்குமார் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர், பழனிக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தென்கரை எஸ்.ஐ., அனுசுயா, விபத்து ஏற்படுத்திய ஆண்டிபட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தியை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்