உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.இக்கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஏப்., 18 திருக்கம்பம் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கங்கணம் கட்டி விரதம் துவங்கினர். மே 8ல் அம்மன் மலர் விமானத்தில் ஊருக்குள் இருந்து திருக்கோயிலுக்கு பவனி வந்தார். அன்று முதல் திருவிழா தொடங்கியது. தினமும் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண்பாணை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மே 9 ல் அம்மன் முத்துப்பல்லக்கில் பவனி வந்தார். மே 10ல் புஷ்ப பல்லக்கில் வலம் வந்தார்.தேரோட்டம்: நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உற்ஸவம் தேரின் முன் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் திருத்தேர் சக்தி பூட்டுதல் நடத்தி அம்மன் தேரில் எழுந்தருளினார். முக்கிய பிரமுகர்களுக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி., சிவபிரசாத், ஏ.டி.எஸ்.பி.,கள் விவேகானந்தன், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, தி.மு.க., நிர்வாகிகள் சசி, செல்வராஜ், அமலன், கே.எம்.சி., குழும தலைவர் முத்துக்கோவிந்தன், ஸ்ரீபிரகாஷ் புளு மெட்டல்ஸ் நிர்வாக இயக்குனர் வசந்த், லைப் பப்ளிக் பள்ளி இயக்குனர் நாராயணபிரபு, ஸ்ரீ கணபதி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன், ஸ்ரீவாரி ஸ்கேன்ஸ் டாக்டர் வேல்முருகன், தேனி ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம்,கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் அம்மன் சன்னதி முன் நிலை நிறுத்தப்பட்டதுடன் முதல் நாள் தேரோட்டம் நிறைவு பெற்றது. நாளை 2ம் நாள் தேரோட்டம் முடிந்து, மே 13 அம்மன் திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்வும், மே 14ல் ஊர்ப் பொங்கல் விழாவுடன் நிறைவு பெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று அம்மன் தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை