உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வி.வி., பேட் கருவியில் இருந்து பேப்பர் ரோல்கள் அகற்றம்

வி.வி., பேட் கருவியில் இருந்து பேப்பர் ரோல்கள் அகற்றம்

தேனி : கலெக்டர் அலுவலக ஓட்டுப்பதிவு இயந்திர வைப்பறையில் உள்ள வி.வி.,பேட் கருவியில் இருந்து பேப்பர் ரோல்கள் அகற்றும் பணி நடந்தது.தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டபை தொகுதிகளில் 1225 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது வி.வி., பேட் கருவியில் பேப்பர் ரோல்கள் வைக்கப்பட்டன. அதில் பதிவான ஓட்டுகள் போக மீதம் அந்த கருவியிலேயே பேப்பர்கள் இருந்தன. இதனை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வி.வி.,பேட் கருவியில் இருந்து பேப்பர் ரோல்கள் அகற்றும் பணி தேர்தல் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. துணை தாசில்தார்கள் ராஜா, செந்தில் பணியை ஒருங்கிணைத்தனர். தாலுகா தேர்தல் துணை தாசில்தார்கள் பணியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை