உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகிழ்ச்சி, அச்சம் ஏற்படுத்தும் காட்டு யானைகள்

மகிழ்ச்சி, அச்சம் ஏற்படுத்தும் காட்டு யானைகள்

மூணாறு : மூணாறில் காட்டு யானைகள் மகிழ்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.மூணாறு பகுதியில் காட்டு யானைகளை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும்போது உள்ளூர்வாசிகளான தொழிலாளர்கள் அஞ்சி நடுங்குகின்றனர்.மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் காட்டு யானைகளை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருவதுண்டு. குறிப்பாக படையப்பா ஆண் காட்டு யானையை தேடி அலைவதுண்டு.தவிர மாட்டுபட்டியில் புல்மேடுகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை பயணிகள் பார்க்க தவறுவதில்லை.காட்டு யானைகளை பார்த்தால் குஷி அடையும் பயணிகள் மகிழ்ச்சியுடன் ஊர் திருப்புவதை காண முடியும். தற்போது மாட்டுபட்டியில் முகாமிட்டுள்ள நான்கு காட்டு யானைகளை பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.இது ஒரு புறமிருக்க காட்டு யானைகள் உள்ளதாக அறிந்தால் அஞ்சி நடுங்கும் சூழல் சமீபகாலமாக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இடையே நிலவுகிறது. அதற்கு கடந்த ஜன.23, பிப்.26 ஆகிய நாட்களில் இருவரை கொன்றது காரணமாகும்.அச்சம்:மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் புதுக்கடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன. அவற்றை கடந்து அருகில் உள்ள சான்டோஸ் காலனி செல்ல பகல் வேளையிலும் கூட மக்கள் அச்சமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ