| ADDED : டிச 06, 2025 05:20 AM
தேனி: தேனி மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் 2017 முதல் 2024 வரை சோதனை நடந்தது. இதில் சட்டவிரோத மது விற்பனை, கடத்தல், பதுக்கலில் ஈடுபட்டவர்கள் மீது 1231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைதானவர்களிடம் இருந்து 180 மி.லி., அளவுள்ள 11,601 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மொத்த அளவு 2088.180 லிட்டர் ஆகும். இதனை எஸ்.பி., சினேஹாபிரியா உத்தரவில் நேற்று மாலை டாஸ்மாக் கோடவுன் வளாகத்தில் குழி தோண்டி அதில் ஊற்றி அழிக்கப்பட்டன. கலால்துறை உதவி ஆணையர் பஞ்சாபகேசன், டாஸ்மாக் மேலாளர் சிராஜூதீன், மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி., தேவராஜ் முன்னிலையில் தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாக்கியம் தலைமையிலானபோலீசார் மதுபான அழிப்பு பணியில் ஈடுபட்டனர்.