உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை நீர் வரத்து ஷிப்ட் முறையில் 24 மணி நேரம் கண்காணிப்பு

வைகை அணை நீர் வரத்து ஷிப்ட் முறையில் 24 மணி நேரம் கண்காணிப்பு

ஆண்டிபட்டி : வைகை அணை முழு அளவான 71 அடியாக உயர்ந்து நிரம்பியதால் அணையின் நீர் வரத்து 24 மணி நேரமும் நீர் பாசனத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். கடந்த சில நாட்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் ஜன., 6ல் 71 அடியாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து அணைக்கு உபரியாக வரும் நீர் பெரிய, சிறிய மதகுகள் வழியாக வெளியேறுகிறது. இதனால் வைகை அணையில் வெள்ள அபாயம் தொடர்கிறது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைக்கான சூழல் தொடர்கிறது. மழையால் எந்நேரமும் அணைக்கான நீர் வரத்து உயரும் வாய்ப்புள்ளது. அணையின் நீர் வரத்தைப் பொறுத்து, வெளியேறும் நீரின் அளவை நிர்ணயித்து, அணை நீர்மட்டம் 71 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கான நீர் வரத்தை கண்காணிக்கும் பணியில் நீர்ப்பாசனத்துறை அலுவலர்கள், அதிகாரிகள் கொண்ட குழு 3 'ஷிப்டு'களாக அணையில் தொடர்ந்து 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி