தேனி: தேனியில் வீட்டின் முன் உள்ள பொதுப் பாதையை நீட்டிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய தி.மு.க., தெற்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் கம்பம் புதுப்பட்டி ரவி 54, உறவினர்கள் சூரஜ் 24, ராஜா 30, மற்றும் ரவியின் கார் டிரைவர் சிவசக்தியை கொடூரமாகதாக்கிய ராமராஜ், மணவாளன், சின்னச்சாமி, பிரித்விராஜ், அபிராஜ் என மொத்தம் இருதரப்பிலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர். பாலார்பட்டி தெற்குத்தெரு ரமேஷ் மனைவி சத்யா 41. இவரது வீடு அப்பகுதியில் உள்ளது. வீட்டின் முன் 12 அடி பொதுப்பாதை உள்ளது.பாதை பயன்படுத்த பற்றாக்குறை ஏற்பட்டதால் கூடுதல் பாதை அமைக்க வேண்டும் என சத்யா, அருகில் தலா 5 சென்ட் நிலம் என 10 சென்ட் நிலஉரிமையாளர்களான மணவாளன், ராமசாமி ஆகியோரிடம், எனக்கு சொந்தமான நிலம் ஆவணப்படி உங்கள் நிலத்தில் உள்ளது என, தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து தீர்வு காண சில மாதங்களுக்கு முன் வீரபாண்டி போலீசில்இருதரப்பினரும் புகார் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்வு காண வலியுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இருதரப்பினரும்பெரியகுளம் சப்கலெக்டரிடம் புகார் அளித்து, இடத்தை அளக்க நேற்று காலை அதிகாரிகள் சென்றனர். அப்போது மணவாளன், ராமசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தகராறு ஏற்பட்டதால், அளக்க சென்றவர்கள் அதிகாரிகள் சென்றுவிட்டனர்.இந்நிலையில் சத்யா தனது தங்கை கணவரும் தி.மு.க., தெற்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளருமான ரவியை அலைபேசியில் அழைத்தார். அவர் ஒரு காரில் தனது ஆதரவாளர்களுடனும்,கைத்துப்பாக்கி(ரிவால்வார்), உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துமணவாளன், ராமசாமி தரப்பினரை தாக்கி காயங்களை ஏற்படுத்தினார். எதிர்தரப்பினர் தாக்குதலில் ரவி டிரைவர் சிவசக்தி காயமடைந்தார். இதில் தேனி டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான போலீசார் மணவாளன் புகாரில் சத்யா, அவரது மகன் சூரஜ் 24, தங்கையின் கணவர் தி.மு.க., தெற்கு மாவட்ட தி.மு.க, அயலக அணி அமைப்பாளர் ரவி, அவரது மனைவி ஜமுனா, உறவினர் ராஜா மற்றும் சிலர் மீது சட்டவிரோத ஆயுதங்கள், வன்முறை கட்டுப்படுத்தும் சட்டப் பிரிவு,, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் படியும், ரவியின் கார் டிரைவர் சிவசக்தி 42 புகாரில், ராமராஜ், மணவாளன், சின்னசாமி, பிரித்விராஜ், அபிராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக வழக்குப் பதிந்து சூரஜ், ரவி, ராஜா, ராமராஜ், மணவாளன், சின்னசாமி, பிரத்விராஜ், அபிராஜ் ஆகிய 8 பேரை கைது செய்தனர். ரிவால்வார், கார் பறிமுதல் செய்யப்பட்டன.