உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரக ஒதுக்கீடு சட்டத்தில் நெசவாளர் மீது வழக்கு

ரக ஒதுக்கீடு சட்டத்தில் நெசவாளர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: கைத்தறிக்கான ரக ஒதுக்கீடு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினர் கொடுத்த புகாரில் சக்கம்பட்டி நெசவாளர் மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சக்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேல் 55, சொந்தமாக விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய துணி ரகமான காட்டன் சேலையை விசைத்தறியில் கூடுதல் பாவு இழைகளுடன் உற்பத்தி செய்து வந்தார். ரக ஒதுக்கீடு சட்டத்தின் கீழ் அமலாக்க அலுவலர் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் ஞானவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை