உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்

தேனி: மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் 1413 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.வேளாண்துறை சார்பில் 50 சதவீத மானியத்தில் மண்வெட்டி, கடப்பாறை, களைக்கொத்து, 2 கருக்கருவாள், மண் அள்ளும் சட்டி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 2994 ஆகும். விவசாயிகள் இக்கருவிகளை ரூ.1531 செலுத்தி வாங்கி கொள்ளலாம். இக்கருவிகள் ஆண்டிபட்டி, பெரியகுளம், சின்னமனுார் வட்டாரங்களுக்கு தலா 177, கடமலைகுண்டு, தேனி, கம்பம், உத்தமபாளையம் வட்டாரங்களுக்கு தலா 176, போடி வட்டாரத்தில் 178 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் அருகே உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு இக்கருவிகளை பெறலாம் என அதிகாரிகள் தெரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை