உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.87,500 சிக்கியது

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.87,500 சிக்கியது

பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை சோதனை நடத்தி கணக்கில் வராத 87,500 ரூபாயை கைப்பற்றினர்.பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை எதிரே பத்திரப் பதிவுத்துறை எண் 2 இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாக சார்பதிவாளர் பரமேஸ்வரி 56, பணியாற்றி வருகிறார். இவர் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் தாசில்தார் நகரில் வசித்து வருகிறார்.பெரியகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு வரும் பொதுமக்களிடம் அதிகளவில் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு பொதுமக்கள் புகார் அனுப்பினர்.இதனடிப்படையில் நேற்று மாலை 4:00 மணிக்கு தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, ஜெயப்பிரியா உட்பட 10 போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். கணக்கில் வராத 87,500 ரூபாயை கைப்பற்றினர்.இந்த தொகைக்கு சார்பதிவாளர் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இச்சோதனையின் போது பணியாளர்கள் 3 பேரிடமும் சோதனை நடத்தினர்.நேற்று எத்தனை பத்திரங்கள் பதிவாயின என்ற விபரங்களை சேகரித்தனர். சோதனையின் போது பத்திரப்பதிவுக்கு வந்திருந்த 10 பேர் வெளியேற்றப்பட்டனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை